மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி
எட்டயபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில்
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும். மாதம் ஒருமுறை மின் அளவீடு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எட்டயபுரம் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாதுரை ஆர்பாட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ராகவன் எட்டயபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ் தாலுகா குழு உறுப்பினர்கள் மாணிக்கவாசகம் கண்ணன் பாலமுருகன் முருகேசன் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.