தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

68பார்த்தது
மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நீதிச் சட்டம் , பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், பாரதிய சாட்சிய சட்டம் என கொண்டு வந்துள்ளது இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது

இந்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக வழக்குப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்களின் இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தூத்துக்குடி திருச்செந்தூர் கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் ஸ்ரீவைகுண்டம் விளாத்திகுளம் என மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி