மின்கட்டண உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு சார்பில் விவிடி சிக்னல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கிட்டு வசூல் செய்ய கோரியும் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு சார்பில் மாநகர செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி தலைமையில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ஞானசேகர், மாவட்ட செயலாளர் கருமமண், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் லோகநாதன், மாநகர உதவி செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்