தூத்துக்குடியில் காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையின் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களின் குறைபாடுகளை அவர் கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
வாகன ஆய்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.