இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம்: கனிமொழி எம் மரியாதை

67பார்த்தது
தியாகி இம்மானுவேல் சேகரனின் 67 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு இன்று (செப்.,11) திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைசெல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி