அமைச்சர் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு!

66பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கனிமொழி கருணாநிதி எம்பி போட்டியிடுகிறார்.

கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி 39 வது வார்டு பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு 39 வட்ட செயலாளரும் மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து சிறப்பான அளித்தனர்.

தொடர்ந்து ரஹ்மத்துல்லாபுரம் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவனுக்கு வட்டச் செயலாளர் கதிரேசன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், ஆகியோர் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து
அமைச்சர் கீதா ஜீவன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெரு பகுதிக்கு வருகை தந்தார் அங்கு வட்டச் செயலாளர் தெர்மல் சக்திவேல், தலைமையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி