தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசுப் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோயில் வாசல் பேருந்து நிலையத்திலிருந்து பகத்சிங் பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில், தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த நடத்துனர் சந்திரன் (44), மங்கம்மா சாலை, மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன் (49) ஆகியோர் பணியில் இருந்தனர்.
இந்த பேருந்து ரயில்வே நிலைய விலக்கு அருகே வந்தபோது, சுமார் 55 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத ஆண், பேருந்தின் இடது பக்க பின் சக்கரத்தில் விழுந்தாராம். இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.