தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி!

55பார்த்தது
தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையம் ஆகிறது துாத்துக்குடி!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, 3, 115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் உடைய இரண்டாவது பெரிய ஓடுதளம் உள்ள விமான நிலையமாக துாத்துக்குடி மாறுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதியும் உடைய நகரம் துாத்துக்குடி. பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம் என, வளர்ந்து வரும் நகரமாக துாத்துக்குடி விளங்குகிறது. 'பர்னிச்சர் பார்க், வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கார்' உற்பத்தி ஆலை, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் என, அடுத்தடுத்து புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக, துாத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. துாத்துக்குடி - சென்னை இடையே, தினமும் ஐந்து முறையும், துாத்துக்குடி - பெங்களூரு இடையே தினமும் இரண்டு முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதல் விமானங்களை கையாளும் வகையில், 227. 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 17, 341 சதுர மீட்டரில் அமைக்கப்படும் புதிய முனையத்தில், விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதை சார்ந்த அலுவலக கட்ட டங்கள், தீயணைப்பு துறை கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி