இருமொழி கொள்கையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவோம். அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை ‘உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்’ என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.