மர்ம நோயால் பிளஸ் 2 மாணவி திடீர் மரணம்

59பார்த்தது
மர்ம நோயால் பிளஸ் 2 மாணவி திடீர் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை அடுத்துள்ள நகனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி (16) என்பவர் மெஞ்ஞானபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி மகாலட்சுமிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் கால் மூட்டு கீழ் பகுதியில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் காலில் வலி ஏற்படவே அவரது பெற்றோர், மகளை மெஞ்ஞானபுரம் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தைதமிழ்செல்வன், சாத்தான் குளம் போலீசில் புகார்செய்தார். உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குப்பதிந்து விசாரைணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி