திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்து வணங்குவது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தாராபுரத்தைச் சேர்ந்த சபாபதி என்ற பக்தரின் கனவில் வைக்கோல் வைக்க உத்தரவானதைத் தொடர்ந்து உத்தரவு பெட்டியில் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது.