இந்தியாவிற்கென்று தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய விளையாட்டு என பல இருக்கிறது. அதே போல் இந்தியாவிற்கென தேசிய இனிப்பு ஒன்று உள்ளது உங்களுக்குத் தெரியுமா? நம் நாட்டின் தேசிய இனிப்பு ஜிலேபி ஆகும். இது ஈரானிய இனிப்பு என அழைக்கப்படுகிறது. பண்டைய சமஸ்கிருத நூல்களிலும் ஜிலேபி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிலேபி மீது இந்திய மக்கள் கொண்டுள்ள காதல் பல நூற்றாண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது.