ஈஷா யோகா சார்பில் இலவச வகுப்பு: ஆகஸ்ட் 7ல் தொடங்குகிறது!

85பார்த்தது
ஈஷா யோகா சார்பில் இலவச வகுப்பு: ஆகஸ்ட் 7ல் தொடங்குகிறது!
தூத்துக்குடியில் ஈஷா யோகா சார்பில் 7 நாள் இலவச வகுப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கத்தில் ஆகஸ்ட் 7 முதல் 13ஆம் தேதி வரை ஈஷா யோகா சார்பில் 7 நாள் இலவச வகுப்பு நடைபெற உள்ளது. கபவர 6: 00 - 8: 30 மற்றும் மாலை 6: 00 - 8: 30 ஆகிய நேரங்களில் வகுப்புகள் நடைபெறும். 15 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

இதில், கவனக் குவிப்பு & ஞாபக சக்தி மேம்படும், உடல் & மன நலன் மேம்படும், பயம், பதற்றம் & மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும், சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு: 8300098444, 9092208800 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி