படகுகளுக்கு ரூ. 15 கோடி நிவாரண தொகை வழங்கப்படும்:

79பார்த்தது
படகுகளுக்கு ரூ. 15 கோடி நிவாரண தொகை வழங்கப்படும்:
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 4, 928 மீன்பிடி படகுகளும், எந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரண தொகையாக ரூ. 15 கோடி வழங்கப்படும். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பசு, எருமைக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்க வசதியாக ரூ. 1½ லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரண தொகை தலா ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி