குடிநீர் கேட்டு மீனவ மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

63பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் கடந்த 60 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட புன்னகாயல் மீனவ கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ளது புன்னக்காயல் மீனவ கிராமம் கடற்கரை கிராமமான இங்கு சுமார் 10, 000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
அதிக அளவு கப்பல் மாலூமிகளும் இந்த கிராமத்தில் தான் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாமிரபரணி ஆறு முடிவடையும் பகுதியான புன்னகாயலுக்கு பல ஆண்டுகளாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் கடந்த 70 நாட்களுக்கு மேல் மேலாக வழங்கப்படாமல் உள்ளது இதன் காரணமாக புன்னகாயல் மீனவ கிராம மக்கள் தண்ணீரை குடம் பத்து ரூபாய் என விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இதை அடுத்து பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி