விடுதியில் தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை!

71பார்த்தது
விடுதியில் தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை!
திருச்செந்தூரில் தனியாா் விடுதியில் ராஜபாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவைச் சோ்ந்த பாக்கியஸ்வரன் (49). பஞ்சு ஏற்றுமதி தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி வசந்தலட்சுமி (42). இவா்கள் கடந்த வியாழக்கிழமை திருச்செந்தூா் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினா். மறுநாள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெகுநேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி பணியாளா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது தம்பதி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடன் தொல்லையால் அவா்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி