தூத்துக்குடி அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் இரட்சணியபுரத்தை சேர்ந்தவர் கனி பாண்டியன் மகன் முத்துக்குமார் (25), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜலட்சுமி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தாராம்.
அவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை தொடர்வதற்காக தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதற்கிடையே அவரது மனைவிக்கு கடந்த 27ஆம் தேதி பிறந்தநாள் வந்தது. அப்போது முத்துக்குமார் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
ஆனால் அவர் வர மறுத்து விட்டாராம். இதனால் மனம் உடைந்த முத்துக்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.