தமிழக அரசை வலியுறுத்தி ரத்ததான முகாம்: நூதன போராட்டம்!

85பார்த்தது
தமிழக அரசை வலியுறுத்தி ரத்ததான முகாம்: நூதன போராட்டம்!
சுகாதாரத் துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காசநோய் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ரத்த தானம் செய்யும் முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் வைத்து நடைபெற்றது.

முகாமிற்கு தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் காசி விஸ்வநாதன், செயலாளர் மலை விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தன‌ர். மாவட்ட பொருளாளர் சந்தான சங்கர்வேல் அனைவரையும் வரவேற்றார்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 2001ம் வருடத்தில் இருந்து காசநோய் தடுப்பு திட்டமானது, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென, பல்வேறு பணிகளில் 1936 காசநோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையிலே குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆண்டுகள் பணி செய்த காசநோய் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசை வலியிறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் பணியாளர்கள் இரத்த தானம் செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி