வெளிநாட்டினர் பொங்கலிட்டு கொண்டாட்டம்!

569பார்த்தது
தூத்துக்குடி சாயர்புரம் அருகே உள்ள பிரம்ம ஜோதி என்ற பண்ணை தொட்டத்திற்கு வந்தனர். ‌ இந்த ஆட்டோ ரிக்க்ஷா குழுவில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 19 ஆண்களும் 7 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தூத்துக்குடி சாயர்புரம் பண்னை தொட்டத்திற்கு வந்த இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆண்களுக்கு வேஷ்டி துண்டு பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி சேலை சட்டை வழங்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய பாரம்பரிய உடை யில் பொங்கல் வைப்பது குறித்து விளக்கப்பட்டது. பின்னர் வேஷ்டி, துண்டு, சேலைகளை அணிந்து வந்த வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பனை ஓலை வைத்து பச்சரிசி வெல்லம் நெய்யிட்டு சர்க்கரை பொங்கலை வைத்தனர் பொங்கல் பொங்கி வரும் போது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக குலைவை யிட்டனர். பின்னர் அனைவருக்கும் தயார் செய்யப்பட்ட பொங்கலை வரிசையா வைக்கப்பட்டு சிறந்த பொங்கல் தேர்வு செய்யப்பட்டனர் இதில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி தயார் செய்த பொங்கல் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வாழைக்குலை பரிசாக வழங்கப்பட்டது தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை தாங்கள் இங்கு கொண்டாடியது தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி