ஆதிச்சநல்லூரில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை

69பார்த்தது
ஆதிச்சநல்லூரில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை நடந்தது.

இதில் தெற்கு கள்ளி குளம் திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து நடத்திய இந்த பட்டறையில் மரபு நடை பயணமும் நடந்தது. இதில் நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம், சிவகளை உள்பட பகுதியில் மாணவர்கள் மரபு நடை பயணம் மேற்கொண்டனர்.

கிருஷ்ணாபுரத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்துகொண்டு மாணவ மாணவிகளிடம் கலை சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். ஆதிச்சநல்லூரில் நடந்த பயிற்சி பட்டறைக்கு தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் கிரிஜா தலைமை வகித்தார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளைதொல்லியல் கழக நிறுவனர் சிவகளை மாணிக்கம், பாளை சேவியர் கல்லூரி தொல்லியல் பிரிவை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சோனா கிறிஸ்டி, சவரி ராயம்மாள், கிரேஸ் புஷ்பா ஜுலியட், ராதா ருக்மணி, வணிக நிர்வாகிவியல் தலைவர் செல்வகுமார், ஜெமிலா, தஸ்லிமா பீவி , சேவியர் கல்லூரி தமிழ்த்துறையை சேர்ந்த இளங்கோ மணி, விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முருகவேல் இணைத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி