கிறிஸ்தவ ஆலயங்களில்  புத்தாண்டு  சிறப்பு ஆராதனை

68பார்த்தது
கிறிஸ்தவ ஆலயங்களில்  புத்தாண்டு  சிறப்பு ஆராதனை
கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு  சிறப்பு ஆராதனை நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் தலைமைப் பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலயத் தில் இரவு 11: 30 மணிக்கு பழைய வருட ஆராதனை பேராலய உதவி குரு பொன் செல்வின் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.  


நடு இரவு 12 மணிக்கு  புத்தாண்டு பிறப்பு பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை ஆராதனையும் பேராலய தலைமைகுரு  ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிகுரு பொன் செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு ஆகியோர்  முன்னிலையில் நடந்தது.   இதில் மக்கள் புத்தாடைகள் அணிந்து  திரளாக பங்கேற்றனர். ஆராதனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  

காலை 9 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை பாடல் ஆராதனையாக நடைபெற்றது. இவ்வாராதனை பேராலய தலைமை குரு  ஹென்றி ஜீவானந்தம், உதவிகுரு பொன் செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு ஆகியோர்  முன்னிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து அருட்செய்தி வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி