அருங்காட்சியகத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!

4650பார்த்தது
அருங்காட்சியகத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
கனமழையால் சேதம் அடைந்து சீரமைக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.  

கனமழையால் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று அருங்காட்சியகத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "விலைமதிப்பற்ற தொல்பொருள்களை, இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதுகாத்திட இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான தீர்வுகளைக் கண்டடைய வேண்டும் என்று தெரிவித்தார்.  

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ. அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி