குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

57பார்த்தது
குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி
நாசரேத்தில் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு என். றி. என் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் தினந்தோறும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு காலை மற்றும் மாலை வேளையில் மாணவ மாணவிகள் அந்த பகுதியில் பேருந்துக்காக வருவது வழக்கம். இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இந்த பகுதிக்கு வரும் குரங்குகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை தூக்கிக்கொண்டு செல்கின்றது.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை தொந்தரவு செய்து வருகிறது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை இந்த குரங்குகள் விரட்டி விரட்டி துரத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கூண்டு அமைத்து இந்த பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி