ஏரல் வட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு:

597பார்த்தது
ஏரல் வட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள ஏரல் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதை மண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்  தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


அதனடிப்படையில் இன்று (30. 12. 2023) ஏரல் வட்டம் சாயர்புரம், மங்களக்குறிச்சி, பால்குளம், வெள்ளமடம் கிராமங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு ரூ. 6000 நிவாரணத்தொகையினை வழங்கினார்கள். மேலும், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உரக்குடோனில் யூரியா, பொட்டாசியம் உள்ளிட்ட உரங்கள் கன மழையால் சேதமடைந்ததை பார்வையிட்டு, கட்டிட சேதாரம், உரங்களின் சேதாரங்களை கணக்கிட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்வின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே. கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந. சுப்பையா, கூடுதல் பதிவாளர் முத்துகுமாரசாமி மற்றும் தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளர் வெ. முரளிகண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி