குறைதீர்க்கும் நாள் மனுக்கள; நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

85பார்த்தது
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்கும் கூட்டம் நடைபெறுகிறது இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்காக மனுக்களை அளித்து வருகின்றனர்.

ஆனால் இந்த மனுக்கள் மீது முறையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஊழல் தடுப்பு மற்றும் மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை அமைப்பினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நான்கு வாரங்களில் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளது இந்த மனுக்களுக்கு எத்தனை மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. எத்தனை மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன எத்தனை மனுக்கள் தவறானவை என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதேபோன்று ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களிடம் மனுக்களை பெற நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கான ஒப்புக் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி