கனரக வாகனத்தில் வண்டல் மண் அல்ல விவசாயிகள் எதிர்ப்பு!

62பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் லட்சுமிபதி தமிழக அரசு சார்பில் தமிழக முழுவதும் குளங்களில் விவசாய தேவைக்காக வண்டல் மண் அல்ல புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

விவசாயிகள் வண்டல் மண்ணை குளங்களில் இருந்து தங்கள் தேவைக்காக டிராக்டர் மூலம் அள்ளி வந்தனர் இந்நிலையில் இந்த புதிய நடைமுறையில் கனரக வாகனங்களான டிப்பர் டாரஸ் லாரிகள் மூலம் மணல் அல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிராக்டர் மூலம் மணல் அள்ளுவதால் குளங்களிலிருந்து அதிகளவு மணல் அள்ள முடியாது. விவசாய தேவைக்கு மட்டுமே அள்ள முடியும் ஆனால் கனரக வாகனங்களான டிப்பர் டாரஸ் லாரி களை பயன்படுத்தி மணல் அள்ளினால் அது மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாகும். குளங்கள் இல்லாத நிலை ஏற்படும் குளங்களிலிருந்து அதிக அளவு மணல் வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் மணல் கொள்ளையர்களுக்கு சாதகமான இந்த நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி