கிரிக்கெட் போட்டி: வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் விழா!

83பார்த்தது
கிரிக்கெட் போட்டி: வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் விழா!
டி. கே. சி. நகரில் கிரிக்கெட் போட்டி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடந்தது.          நாசரேத் சமத்துவபுரம் அருகில் உள்ள டி. கே. சி. நகர் விளையாட்டு மைதானத்தில், கரோலின் மாற்றுத் திறனா ளிகள் உதவி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக் கான கிரிக்கெட் போட்டியும், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக உணவுப்  பொருட்களும் வழங்கப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியின ருக்கு ஆசிரியர் ராஜேஷ் ஜேக்கப்  நினைவு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. போட்டியை பெத்தேல் மேசியா திருச் சபை போதகர் பாஸ்டர் எபநேசர்  தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் டி. கே. சி. நகர் வார்டு உறுப்பினர் முனியசெல்வி முருகன் முன்னிலை வகித் தார். கரோலின் மாற்றுத் திறனாளிகள் உதவி அறக் கட்டளை அறங்காவலர் அந்தோணிராஜ் மற்றும் பயிற்சியாளர் அனிஷ் நடராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.