சாத்தான்குளம் அருகே தந்தை, மகனைத் தாக்கியதாக நிதி நிறுவன ஊழியா்கள் இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தைச் சோ்ந்தவா் மிகாவேல் (58). இவரது மகன் கிறிஸ்டோ அதிபன் (25). இவா்கள் பேய்க்குளம் பஜாரில் தனியாா் பால் ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகின்றனா். இதற்காக மிகாவேல் இணையதளம் வாயிலாக தனியாா் நிறுவனத்தில் ரூ. 5 லட்சம் கடன் பெற்ாகவும், மாதம் ரூ. 20 ஆயிரம் வீதம் 8 மாதங்களாக தவணை செலுத்தியதாகவும், உடல் நலக் குறைவால் 9ஆவது தவணை செலுத்த தாமதமானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் கடைக்கு வந்து மிகாவேலை அவதூறாகப் பேசி தாக்கினராம். தடுக்க முயன்ற கிறிஸ்டோ அதிபனையும் அவா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து மிகாவேல் அளித்த புகாரின்பேரில், நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் மீது சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜன் வழக்குப் பதிந்து, தேடி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் கடைக்கு வந்து மிகாவேலை அவதூறாகப் பேசி தாக்கினராம். தடுக்க முயன்ற கிறிஸ்டோ அதிபனையும் அவா்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.
இதுகுறித்து மிகாவேல் அளித்த புகாரின்பேரில், நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் மீது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து, தேடி வருகிறாா்.