நிதி நிறுவன பெண் உரிமையாளர் மீது தாக்குதல்

3605பார்த்தது
நிதி நிறுவன பெண் உரிமையாளர் மீது தாக்குதல்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள காரம்பாடு சில்வர்சிட்டி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மனைவி ரூபிஸ்டா (38). இவர், திசையன்விளையில் கடந்த 8 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டையை சேர்ந்த இன்பராஜ் மகன் சமுத்திரபாண்டி (32) என்பவர் வசூல் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.

இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூபிஸ்டா விபத்தில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதைத் தொடர்ந்து நிதி நிறுவன வரவு செலவு கணக்கு தொடர்பாக அவருக்கும், சமுத்திரபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சமுத்திரபாண்டி, நிதி நிறுவனத்தில் வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று ரூபிஸ்டா, அவரது தாய், அலுவலக பணியாளர் சுந்தரி ஆகியோர் சுண்டங்கோட்டையில் உள்ள சமுத்திர பாண்டி வீட்டிற்கு சென்றனர்.

அவரிடம், நிதி நிறுவன வரவு செலவு கணக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சமுத்திரபாண்டியும், அவரது தந்தை இன்பராஜ், தாய் பூங்கொடி, சகோதரர் கார்த்தீசபாண்டி ஆகியோர் ரூபிஸ்டாவை சரமாராக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார்களாம்.

இதுகுறித்து ரூபிஸ்டா, அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி