சான்றிதழ்களை பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

576பார்த்தது
சான்றிதழ்களை பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்!
கனமழை வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களை பெற தாலூகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிச. 17, 18ம் தேதிகளில் பெய்த மிக கனமழை மற்றும், தாமிரபரணி வெள்ளப்பெருக்கு காரணமாக பலத்த பாதிப்பு ஏற்பட்டது.   வீடுகளில் நீர் புகுந்ததால் அழிந்து போன அசல் கல்வி மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்று, சாதிச்சான்று, வாரிசு சான்று, இருப்பிட சான்று, விதவை சான்று, இரு பெண் குழந்தைகள் சான்று, கலப்பு திருமண சான்று, ஆதரவற்ற விதவை சான்று, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் சான்று, திருமணமாகவில்லை சான்று, ஆண் குழந்தை இல்லை என சான்று, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கு பொதுமக்கள் திருச்செந்தூர் தாசிதார் அலுவலகத்தில் இயங்கி வரும் பொது சேவை மையத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி