விமான நிலைய விரிவாக்க பணி; கனிமொழி எம்பி ஆய்வு

66பார்த்தது
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 227. 33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார.

விமான நிலைய கட்டுமான பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தை நிறைவாக தமிழக அரசு செய்து உள்ளது. மேலும் முழு ஒத்துழைப்பு தமிழக அரசு தங்களுக்கு வழங்கி உள்ளதாகவும் இந்த விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், முனைய கட்டுமானப் பிரிவுத் தலைவர் பாரி, உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி