மனு அளிக்க வந்த முதியவரை தற்கொலைக்கு தூண்டிய யூடியுபர் கைது

65பார்த்தது
ஆழ்வார்தோப்பு சேர்ந்த பாஸ்கர் (52) என்பவர் நேற்று (29. 07. 2024) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்த போது திடீரென எளிதில் தீப்பற்ற கூடிய தின்னர் எனும் திரவத்தை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் பாஸ்கரிடம் விசாரணையில் பாஸ்கர் என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே நடைபாதை சம்பந்தமாக நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் பாஸ்கர் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக புறப்பட்டபோது ஆழ்வார்தோப்பு சேர்ந்த விக்னேஸ்வரன் (30) என்பவர் தான் நடத்தி வரும் யூடியுப் சேனலின் அதிக லைக் பெரும் ஆதாயத்திற்காக, மேற்படி பாஸ்கரிடம் இதுபோன்று புகார் மனு கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றும், உங்கள் மீது தீ வைத்துக் கொள்வது போல் செய்யுங்கள் அப்போது நான் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்புகிறேன் அப்போதுதான் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறியதால் பாஸ்கர் தின்னரை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி