தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் கோ. லட்சுமிபதி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி இன்று 5. 6. 24 மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர். ஐஸ்வர்யா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.