வ. உ. சி. , மாஸ்க் அணிந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

68பார்த்தது
வ. உ. சி. , மாஸ்க் அணிந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ஓட்டப்பிடாரத்தில் டிஎம்பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வஉசியின் மாஸ்க் அணிந்து தேச ஒற்றுமைக்கு பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன் வ. உ. சியின் பிறந்த தினம் நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ. உ. சியின் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வஉசியின் மாஸ்க் அணிந்து இந்திய பொருட்களை வாங்கிடவும், அனைவரிடமும் தேசப்பற்று, தேசபக்தியை வளர்த்து தேச ஒற்றுமைக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்முத்துசாமி, வட்டார வள பயிற்றுநர்கள் முத்துமுருகன், முத்துராஜ் உள்பட டிஎம்பி மெக்கவாய் கிராமிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி