9ம் வகுப்பு மாணவி உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி பலி

557பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ள மேல மருதூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி உள்ளது இதைத்தொடர்ந்து குளத்தில் ஏராளமானோர் குளித்து வருகின்றனர்

இன்று மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த நன்பர்களானஒன்பதாம் வகுப்பு மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி கல்லூரி மாணவி கனிச்செல்வி ஆகியோர் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் இதில் மாணவி மேனகா குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார் இதை பார்த்த கலைச்செல்வி மற்றும் கனிச்செல்வி ஆகியோர் அவரை மீட்க போராடியுள்ளனர் இதில் மாணவி மேனகா மற்றும் இளம்பெண் கலைச்செல்வி ஆகியோர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர் குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கனிச்செல்வி என்பவரை அருகே இருந்த கிராம மக்கள் போராடி பத்திரமாக மீட்டனர் பலியான இரண்டு பேரும் உடல்களை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மீட்கப்பட்ட கல்லூரி மாணவி கனிச்செல்விக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :