கழிவு மீன் ஆலைகளுக்கு எதிரான போராட்டம்: மக்கள் அதிகாரம் ஆதரவு

57பார்த்தது
கழிவு மீன் ஆலைகளுக்கு எதிரான போராட்டம்: மக்கள் அதிகாரம் ஆதரவு
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள, துர்நாற்றம் வீசுகின்ற, மூன்று கழிவு மீன் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொதுமக்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்தனர். பொதுமக்கனின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஒட்டு மொத்த பொட்டலூரணி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அதனைத் தொடர்ந்து பொட்டலூரணி பொதுமக்கள், கழிவு மீன்நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு அனுமதியை இரத்து செய்ய வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளுடன், தேர்தல் முதல் பொதுமக்கள் பந்தல் அமைத்து நாள்தோறும் உணவுக் கூடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மாநில இணைச்செயலாளர், தோழர் குருசாமி, நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் பொட்டலூரணிப் போராட்டப் பந்தலுக்கு இன்று வருகைதந்து, போராட்டுக்குழுவினரிடம், மக்கள் அதிகாரம் அமைப்பு, கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்கும் என்றுகூறி ஆதரவு தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you