தூத்துக்குடி: மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை: மேயர்

54பார்த்தது
தூத்துக்குடி: மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை: மேயர்
தூத்துக்குடி சிவந்தகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த முதலமைச்சர் மற்றும் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தகுளம் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி தருமாறு வந்த பொது மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டதுடன் அதன் அருகே உள்ள நியாய விலை கடையையும் ஆய்வு செய்தார். 

மேலும் பள்ளியை தரம் உயர்த்துவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது மேயர் நேர்முக உதவியாளர்கள் பிரபாகர், ஜெஸ்பர், உடன் இருந்தார்கள்

தொடர்புடைய செய்தி