அமைச்சரை திருப்பி அனுப்பிய கிராம மக்கள் மீது வழக்கு பதிவு!

3267பார்த்தது
பொட்டுலூரணி கிராமத்தில் மீன் பதப்படுத்தும் ஆலை அகற்றக் கோரி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் 931 வாக்காளர்கள் உள்ள நிலையில் தாங்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழக அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்ற போது கிராம மக்கள் அமைச்சரை திரும்ப அனுப்பினர். இதனால் கிராமத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த கிராமத்திற்கு இரண்டு காரில் கள்ள ஓட்டு போட வந்த நபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதனால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பொட்டுலூரி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் உள்பட 50 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் இரண்டு பிரிவில் வழக்குகள் பதிவு செய்தனர்.

.

தொடர்புடைய செய்தி