தூத்துக்குடியில் டி. ஐ. ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு!

62பார்த்தது
தூத்துக்குடியில் டி. ஐ. ஜி. பிரவேஷ்குமார் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு, மாவட்ட தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், மாவட்ட தனிவிரல் ரேகை பிரிவு, மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை,  


சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்பட பிரிவு, மாவட்ட காவல் அலுவலக பண்டக பிரிவு, மாவட்ட ஆயுதப்படை, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆய்வு செய்து மேற்படி பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you