அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் கேள்விக்குறி; பொன்குமார்

81பார்த்தது
அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் கேள்விக்குறி; பொன்குமார்
அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் இன்று இந்தியாவில் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என்று விவசாய நிறுவன தலைவரும் கட்டுமான தொழிலாளர் வாரிய தலைவருமான பொன் குமார் தெரிவித்தார். தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் விவசாய தொழிலாளர்கள் கட்சி நிறுவன தலைவர் கட்டிட தொழிலாளர் நலவாரிய தலைவருமான பொண்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் "அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் இன்று இந்தியாவில் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் அடியோடு அப்பட்டமாக மீறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் 1200 கோடி ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட 4 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள் இதேபோன்று ஏராளமான திட்டங்கள் மகளிர் உரிமை தொகை இலவசப் பேருந்து மக்களை தேடி மருத்துவம் இவை எல்லாம் நேரடியாக சென்று மக்களை அடைந்திருக்கிற காரணத்தினால் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தொடர்புடைய செய்தி