பெண் கொடூர கொலை: கணவர் வெறிச்செயல்!

6741பார்த்தது
பெண் கொடூர கொலை: கணவர் வெறிச்செயல்!
கோவில்பட்டி அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.  


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர் மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து (56). இவரது மனைவி மருதம்மாள்(54). இந்நிலையில் இன்று காலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  


இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி, அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது வீட்டின் உள்ளே இருந்த இன்னாசிமுத்து  தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மருதம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி