பா. ஜ. க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அறிவிப்பு

65பார்த்தது
பா. ஜ. க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா. ஜ. க. அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஜீலை 27-ல் தி. மு. க. சார்பில் கனிமொழி எம்பி தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று வடக்கு மாவட்ட செயலாளா் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளா்ச்சியை உருவாக்கிட உதவிட வேண்டும். ஆனால் ஒன்றிய பா. ஜ. க. அரசு சமா்ப்பித்துள்ள மத்திய பட்ஜெட் தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் தாராளமாக அள்ளிக் கொடுத்தும், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.


மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினா்கள் கழக முண்ணனியினா் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், கிளைக் கழகச் செயலாளா்கள், நிர்வாகிகள் அனைத்து கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழகத் தோழா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திராளாகக் கலந்து கொண்டு ஆா்பாட்டத்தை வெற்றியடையச் செய்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி