தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மாரியப்பன், மாரி செல்வம் ஆகியோர் கத்திமுணையில் பாலியல் பலாத்காரம் செய்தனர் மாரியப்பனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த மாரி செல்வத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான காவல்துறையினர் காலில் சுட்டு மடக்கி பிடித்து கைது செய்தனர் இந்த சம்பவத்தின் போது தப்பி ஓட முயன்ற மாரிச்செல்வம் காவலர்களை தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோர் காயமடைந்தனர்
காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராம் ஆகியோரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து காவலர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உயிரையும் பொருட்படுத்தாமல் குற்றவாளியை கைது செய்ததற்காக பாராட்டும் தெரிவித்தார் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்