நடிகை கொடுத்த பாலியல் வழக்கில் இன்று (பிப்.27) காவல் நிலையத்தில் ஆஜராகாத சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இதனையடுத்து சம்மனை கிழித்த சீமான் கார் ஓட்டுநர் மற்றும் காவலரை தாக்கிய சீமான் வீட்டு காவலாளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், என்னை அசிங்கப்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது. நான் ஆஜராவேன் என உறுதி செய்யப்பட்ட பிறகும் என் வீட்டில் ஏன் சம்மன் ஒட்ட வேண்டும். நாளை காலை ஆஜராக முடியாது, என்ன செய்வீர்கள் என போலீசாருக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.