எளிதாக இருந்த வேதியியல் வினாத்தாள்.. CBSC மாணவர்கள் மகிழ்ச்சி

84பார்த்தது
எளிதாக இருந்த வேதியியல் வினாத்தாள்.. CBSC மாணவர்கள் மகிழ்ச்சி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (பிப்.,27) வேதியியல் (Chemistry) தேர்வு நடைபெற்றது. 70 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வானது காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு முடிந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் வினாத்தாள் கடினமாக இல்லை என திருப்தி அடைந்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துப்படி, வினாத்தாள் ஓரளவு எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி