சிறுவன் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை

80பார்த்தது
சிறுவன் விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் விசாரணை
கோவில்பட்டி அருகே சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, அய்யனேரி அருந்ததியா் தெரு, மேல காலனியைச் சோ்ந்த மு. பாலமுருகன் மகன் முத்துக்குமாா் (17). இவா் சரிவர படிக்காததால் பெயின்டிங் வேலைக்குச் சென்றுவந்தாராம். இதனிடையே, கடந்த 4 நாள்களாக அவா் வயிற்று வலி எனக் கூறி வேலைக்குச் செல்லவில்லையாம்.

இதை பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி அவா் விஷம் குடித்தாராம். அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி