ஓட்டுக்கு 200, 300 கொடுத்தால் வாங்குங்கள் - முன்னாள் அமைச்சர்

2237பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றார். திமுகவினர் ஓட்டுக்கு 200, 300, 500 கொடுத்தால் வாங்குங்கள். ஆனால் வாங்கிவிட்டு ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி