பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்வு

59பார்த்தது
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்வு
பொறியியல் படிப்புக்களுக்கான கட்டணங்கள் உயர்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தனியார் கல்லூரி நிறுவனங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணய குழுவிடம் விண்ணப்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பதற்கு தற்போதைய கட்டணம் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்களுக்கு ரூ.50,000, நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ.85,000 ஆகும். மாற்றப்படும் புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த புதிய கட்டணம் 2026-2027 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி