கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையத்மை நீக்க பாதாம் எண்ணெய் உதவி புரிகிறது. இந்த எண்ணெய் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்கிறது. சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, மோனோ சாச்சுரேட் போன்றவை வறட்சியை தடுக்க உதவுகிறது. இந்த எண்ணெயை எடுத்து இரவு நேரங்களில் கண்களுக்கு கீழ் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்து வர கருவளையங்கள் காணாமல் போகும்.