நடிகரும், தேமுதிக தலைவருமான
விஜயகாந்த் டிச.28ம் தேதி காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரைத்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்த கூட வடிவேலு வரவில்லை என பலரும் வடிவேலுக்கு எதிராக கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் இளவரசு, விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த வடிவேலு ஒருவேளை வந்திருந்தால், ரசிகர்கள் யாரேனும் கோவத்தில் வடிவேலுவை தாக்கியிருக்கலாம். தனது பாதுகாப்பை யோசித்தே வடிவேலு வராமல் இருந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.